தமிழகம்
ஓய்வூதிய திட்டம் – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வெளியீடு செய்யப்பட்டது. ஜனவரி 1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




