சென்னையில் வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின்

வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கிறது.வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்படும். இதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.கொள்கை ரீதியான, துறை ரீதியாக பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் போது, அமைச்சரவை கூட்டத்தில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அந்த வகையில், துறை ரீதியாக அமைச்சர்களின் செயல்பாடுகள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கையானது இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் முழு நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.எனவே இந்த அமைச்சரவை கூட்டம் 10 ம் தேதி நடைபெறவுள்ளது.