Uncategorized
தொழிலாளர்கள் பணி நேரத்தை 70-90 மணி நேரங்களாக உயர்த்த திட்டம் இல்லை!

சமீபத்தில், சில பெருநிறுவனத் தலைவர்கள் வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என அரசிடம் கேட்டுகொண்டனர். வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக உயர்த்துவது போன்ற எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
