தமிழகம்
செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு..

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார் என்று செங்கோட்டையன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இபிஎஸ் பெயரை பரிந்துரை செய்தேன் என்று கூறியவர் இரண்டு முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தும், அதிமுக உடைந்து விடக்கூடாது என விட்டுக் கொடுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
திமுகவின் ‘B’ டீமாக தான் இல்லை. கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருப்பதாக செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சியில் நீண்ட காலமாக இருந்த தன்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.




