ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கும் கட்சிகள்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர். மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கலாக உள்ளது . ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது. இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும். இன்று மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேறு சில சட்டங்களை திருத்த வேண்டும்.
