தமிழ்நாட்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள்: தேடுதல் வேட்டையில் சைபர் க்ரைம் போலீசார்!

தமிழ்நாட்டில் இந்தாண்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நேற்று அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களது உழைப்பு தினமும் வீணடிக்கப்படுவதோடு, மிரட்டலுக்கு உள்ளான இடத்தில் உள்ளவர்கள் அச்சத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னையில் இந்தாண்டு இதுவரையில் 229 வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் டிஜிபி அலுவலகத்துக்கு வந்துள்ளது. அனைத்து மிரட்டல்களும் வெளிநாட்டில் இருந்தவாறு ‘டார்க் வெப்’ என்ற இணையத்தை பயன்படுத்தி அதன் மூலம் விடுக்கப்படுகிறது. இதனால் மிரட்டல் ஆசாமிகளை அடையாளம் காண்பது போலீஸாருக்கு கடினமாக உள்ளது. இருப்பினும் சர்வதேச போலீஸார் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு மிட்டலையடுத்து சம்பவ இடம் விரைந்து சோதனை நடத்த சென் னையில் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் 4 அணிகள் உள்ளன. அதோடு மட்டும ல்லாமல் 4 மோப்ப நாய்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




