தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது..

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.




