தமிழகம்
கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தால் ₹8 லட்சம்..

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டு வந்தது. இதை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ₹8 லட்சமாக அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் 8 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.