தமிழகம்
சென்னையில் இண்டிகோ விமான சேவை இன்று மாலை வரை ரத்து..!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச.5) மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




