தமிழகம்
தஞ்சையில் பெண் டீச்சர் வெட்டிக்கொலை..

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் பாபநாசம் பகுதியை சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் காவியாவை வெட்டி படுகொலை செய்துள்ளார்.




