ரஞ்சி கோப்பை- சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்..

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் திரும்பி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட கில் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடினாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா இன்று ரஞ்சிப் போட்டிக்கு திரும்பினார். மும்பையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி லீக ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக ரோகித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புவதால் ரோகித் சர்மா இன்று பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் ரோகித் சர்மா 19 பந்துகளை எதிர்கொண்டு வெறும் மூன்று ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலும் 8 பந்துகளை எதிர்கொண்டு நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார்.
