தமிழகம்
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முறையீடு

ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2,151 கோடி நிதி, அதற்கு 6% வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்கக் கோரிய வழக்கில், கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.