ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது!

- ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவது தான்.
- மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது.
மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது.




