தமிழகம்
விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு…

உளுந்து, பச்சை பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சை பயிறு ₹87.68, ஒரு குவின்டால் ₹8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உளுந்து ஒரு கிலோ ₹78, ஒரு குவிண்டால் ₹7,800 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.