தமிழகம்
பட்டுக்கோட்டையில் விசிக சார்பில் சாலை மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விசிக சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தகுமார் தலைமையில் தொகுதி, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.




