தமிழகம்
தஞ்சையில் ரூபாய் 71 கோடியில் கல்வி கடன்..

தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு 71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் 305 பேருக்கு 23.62 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் மொத்தம் 1841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.



