Uncategorized
அரசு ஊழியர்கள் AI பயன்படுத்த தடை ..

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் AI செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. AI செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகும் நிலையில் ChatGPT, Deepseek போன்ற செயலிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த AI தளங்களால், அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஆபத்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளதாக REUTERS நிறுவனம் கூறியுள்ளது. மத்திய அரசின் தரவுகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.