தமிழகம்
தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் வீரர்..

உத்தரகாண்ட் மாநிலம் டேடூரானில் 38 வது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நீச்சல், துப்பாக்கி சுடுதல்,பளு தூக்குதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான தடகளம் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த செட்டிச்சதிரம் சோனாப்பெட்டை, பெரியார் நகரை சேர்ந்த இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் என்பவர் 16.50 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரவீன் சித்ரவேல்
