தமிழகம்
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘அகமதாபாத்தில் ஒரு பெரிய விபத்து நடந்துள்ளது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் கூற விரும்புகிறேன், அதை ஒருபோதும் மறக்க முடியாது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர், அவர்கள் அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.