ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவினர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பதிலாக திமுக-வே நேரடியாக களமிறங்கியுள்ளது. வி.சி.சந்திரகுமார் திமுக வேட்பாளராக களமிறங்கினார். அதிமுக, பாஜக உள்ளீட்ட பிரதான கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராக களமிறக்கியது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக திமுகவினர் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் நாதக – திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றியதால் சூழல் அசாதரணமாக மாறியது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.வாக்குச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். Advertisement