தமிழகம்
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்-கலெக்டர் அழைப்பு..

திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவு முகாம் நடைபெறுவதாக திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தபட்ட உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.