தமிழகம்
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு…

மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




