தமிழகம்
வீடு புகுந்து சங்கிலி பறித்த ஒருவர் கைது.

திருவாரூர் மாவட்டம், திருத்திரைப்பூண்டி அருகே உள்ள கொறுக்கை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மனைவி சகுந்தலா. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொது கொள்ளை புறம் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இது சம்பந்தமாக சகுந்தலா திருத்திரைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
