தமிழகம்
தஞ்சையில் ஆறு பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் பாமக நிர்வாகியமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய், மருதுபாண்டி, மகேஷ், சேரன், விஜய், ஆகாஷ் ஆகிய ஆறு பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.




