ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் ரூ.110 கோடி வரிஏய்ப்பு மோசடி!

ஹைதராபாத்தில் உள்ள 36 நிறுவனங்களின் ஐடி ஊழியர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாகக் காட்டி வருமான வரிச் சட்டம் 80GGC பிரிவு மூலம் வரிச் சலுகைகளை பெற்றதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. சிலர் தங்கள் முழு சம்பளத்தையும் நன்கொடையாகக் காட்டி வரிச் சலுகை பெற்றுள்ளனர். குஜராத், தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளன.குறிப்பாக ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில், சுமார் 430 ஊழியர்கள் Section 80GGC பிரிவை தவறாக பயன்படுத்தி ரூ.17.8 கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை பெற்றுள்ளனர். 2021-24 வரையிலான வரி கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போலி கோரிக்கைகள் மூலம் வரிச் சலுகை பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31-க்கு முன் ITR-U (Updated Return) தாக்கல் செய்யாவிட்டால் 200% அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.