சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா!

டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மெரிக்காவில் 4 நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் அகதிகளாக தங்கியுள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். இவர்களை எல்லாம் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.

சி 14 ரக ராணுவ விமானத்தில் ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 205 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.