தமிழகம்
2035-ல் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்..

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (space station) கனவு வரும் 2035-ல் நனவாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி நிலையத்திற்கான தொடக்க தொகுதிகள்(modules) 2027-ல் விண்ணில் நிறுவப்படும் எனவும் கூறினார். மேலும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தன்னிறைவான இடத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இத்துடன் ககன்யான் – 3 திட்டமும் தயாராகி வருவதாக கூறினார்.




