தமிழகம்
தங்கம் விலை குறைந்தது..

கடந்த 2 நாட்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11, 600 க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




