தமிழகம்
ஊராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு..

2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5 உடன் நிறைவுற்றது. இவ்வாறு பதவி காலம் நிறைவடைந்த 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தனி அலுவலர்களின் பதவி காலத்தை 2026 ஜனவரி 5 வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்தார். இது நாளை நிறைவேற்றப்படவுள்ளது.




