தமிழகம்
ராமதாஸை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்..

உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ராமதாஸின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார். தற்போது ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.