
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுபான்ஷூ சுக்லா தயாராக இருந்தார்.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 முறை இந்த சரித்திர பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.அனைத்தும் சரி செய்யப்பட்டு space X -ன் Falcon 9 ராக்கெட்,புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் சீறி பாய்ந்தது.நாளை விண்வெளி நிலையத்தை அடைந்து,14 நாட்கள் பூமியை சுற்றி வருவார்கள்.க்ரு-டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா,
இது ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது என விண்கலத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாக இறங்குவோம். பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு இந்தியரும் இந்தப் பயணத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.