தமிழகம்
விஜய்யை விளாசிய நீதிபதி..

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் சாடியுள்ளார். கரூரில் நடந்தது MAN MADE DISASTER எனவும் அவர் கூறியுள்ளார். துயர சம்பவம் நடந்ததும் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் தொண்டர்களையும் அவரைப் பின் தொடர்பவர்களையும் கைவிட்டுவிட்டு மறைந்துவிட்டனர்.கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் ஜட்ஜ் காட்டமாக கூறியுள்ளார்.சட்டத்தின்முன் அனைவரும் சமம்”கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.-பொதுநல மனு தாக்கல் செய்தவர் தரப்பு
சட்டத்தின்முன் அனைவரும் சமம். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன் என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் கூறியுள்ளார்.