தமிழகம்
கூட்டணியை உறுதி செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும் காங்கிரசும் ஒரே அணியில் பயணிக்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் திருமண விழாவில் பேசிய அவர் தன்னை மூத்த அண்ணனாக ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டு இந்தியாவின் குரலாக ஒலிப்பதாக தெரிவித்தார். திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும். ஆட்சியில் பங்கு கூடுதல் சீட்டு என திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.




