தமிழகம்
தமிழ்நாட்டில் பிப்.3 வரை வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழ்நாட்டில் பிப்.3 வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று முதல் பிப்.3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: இன்று முதல் பிப்.1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.




