தமிழகம்

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப் பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது. தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button