பட்டுக்கோட்டையில் ஜனவரி 5ஆம் தேதி “நாளை நமதே” நிகழ்ச்சி

வரும் 5 ஜனவரி 2025 அன்று பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகில் உள்ள கே கே டி சுமங்கலி காலில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நாளை நமதே என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சமூக செயற்பாட்டாளர் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்களின் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு கோவி. செழியன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கல்வியாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் வேதவள்ளி ஜெகதீசன் தொகுத்து வழங்குகிறார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்நிகழ்ச்சி பேருதவியாக அமையும். அதேபோன்று சமுதாயத்திற்காக தியாகம் செய்தவருக்கு விருதுகளும் வழங்கி இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்படுகிறது. கற்போம் கற்பிப்போம்- மகிழ்வித்து மகிழ்வோம் எனும் தாரக மந்திரங்களை தன்னுடைய பிரதான நோக்கமாகக் கொண்டு சமூக பணியாற்றிவரும் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்களின் இந்த நாளை நமது நிகழ்ச்சி டெல்டா பகுதியில் மிகவும் பொதுமக்களால் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி குறித்து பட்டுக்கோட்டை யஹ்யா கூறுகையில்… இது மாணவர்களுக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல மனித நேயத்திற்கான நிகழ்ச்சி என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.



