தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கும்பகோணம் வட்டம், சாக்கோட்டை மாதா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.




