தமிழகம்
ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணித்தால் ₹1000 அபராதம்.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால்.₹1000 வரை அபராதம் விதிக்கப்படும்.ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.