Uncategorized

தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பிப்ரவரி 03,

கடந்த 01.02.2025 ம் தேதி தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 29 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு விழாவானது திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், வடம் இழுத்தல், குண்டு எறிதல் என பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் WHG 304 திருமதி.ஜென்சி சுகிர்தா என்பவர் முதல் பரிசும், குண்டு எறிதல் போட்டியில் HG 180 திரு.விஜின் என்பவர் மூன்றாம் பரிசும், குழுப்போட்டியான கபடி போட்டியில் ஆண்,பெண் ஆகிய இரு அணியினரும் முதல் பரிசும், கைப்பந்து போட்டியில் பெண்கள் அணியினர் முதல் பரிசும் ஆண்கள் அணியினர் இரண்டாம் பரிசும், வடம் இழுத்தல் போட்டியில் பெண்கள் அணியினர் முதல் பரிசும், முதலுதவி அளிக்கும் போட்டியில் ஆண்கள் அணியினர் இரண்டாம் பரிசும், அணிவகுப்பில்(March fast) இரண்டாம் பரிசும், ஒட்டுமொத்தமாக (Overall Trophy) இரண்டாம் பரிசும் வென்றனர்.

மேலும் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையினை ASL 399 திருமதி.பிரபஜா என்பவரும் பெற்றுள்ளார். மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்ற ஊர்க்காவல் படையினரை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button