தமிழகம்
ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்..

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்ட ஜெயராமனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.