தமிழகம்
வல்லம் அருகே மாடு முட்டி பள்ளி மாணவன் பலி..

வல்லம்,அகிழாங்கரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் திரண் பெனடிக். வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மாடு முட்டி உயிரிழந்தார். மாணவரின் உடல் தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.