தமிழகம்
மாநில தடகள போட்டிகள் ஒத்திவைப்பு…

தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருந்த தடகள போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கவிருந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.




