தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..

தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.
அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு தட்டுக்கள் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் வழங்கினார். உடன் திமுக கழக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



