தமிழகம்
ஒரே நாளில் இரு முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ 88,480-க்கு விற்பனையான நிலையில் மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து சவரன் ரூ 89,000 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1400 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.