தமிழகம்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்த ஹோட்டல் தொழிலாளி பலி..

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவர் ஹோட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காட்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கிய போது எதிர்பாராத விதமாக தடுமாறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




