மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட தடை.

சென்னை மெட்ரோ ரயிலில் உணவு உட்கொள்ள பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமூகமான இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.சென்னையின் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்வதால், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அனைவரும் மெட்ரோ பக்கம் திரும்பி வருகின்றனர்.இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நினைவூட்டல்.. இனி சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி கிடையாது. அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதற்கு, விதிமுறைகளை பின்பற்றவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசர அவசரமாக பணிக்கு செல்வோர், பள்ளிகளுக்கு செல்வோர் என்று பலரும் டிபன் பாக்ஸில் உணவு எடுத்து கொண்டு பயணத்தின் போது சாப்பிடுவது வழக்கமான விஷயம் தான். ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
