
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம்(DVK) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையில் இருந்து கட்சியை வழி நடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



