தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா மன்னார்குடியில் அனுசரிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் 101 வது பிறந்தநாள் விழா மன்னார்குடியில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. மருத நில மைந்தர்கள் அமைப்பின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே அலங்கரிக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 11வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேற்படி பிறந்தநாளை ஒட்டி 350 நபர்களுக்கு உணவு மற்றும் பத்து குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ஆடு மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சமத்துவ சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக குரல் கொடுத்தவர் மேலும் விளிம்பு நிலை மக்களுக்காகவே தன் உயிரை கொடுத்தவர. மேற்படி பிறந்தநாள் நிகழ்வை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் ஆர் விஜயன் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.




