தமிழகம்
பட்டுக்கோட்டையில் பனை விதை நடும் பணி தீவிரம்..

பட்டுகோட்டை அடுத்த பெருமாள் கோவில் மற்றும் மகாராஜா சமுத்திரம் பகுதியில் தமிழக அரசால் 6 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் 6 லட்சம் பனை விதைகள் விதைக்க மாவட்ட ஆட்சியர் திட்டமிடப்பட்டு அதற்கானபனை விதைகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதை நடும் பணி, மகாராஜா சமுத்திரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.




