தமிழகம்
போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி..

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் போலீஸ் என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டிய பிரகாஷுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.




